வெப்பாலை (Wrightia tinctoria) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். ரைட்டியா என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்த மரமானது இந்தியா, தெற்காசியா, ஆத்திரேலியா முதலிய நாடுகளில் வறண்ட மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இது பழந்தமிழகத்தில் பாலை மரம் என அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே. கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானை தன் தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டைகளைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். எனவே இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு. இத்தாவரத்தின் பல்வேறு பகுதிகள் மரபார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாகவோ பாதுகாப்பானதாகவோ இருப்பதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. மேலும்...
1783 – சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன.
1944 – பெரும் இன அழிப்பு: டச்சு உளவாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், யூத நாட்காட்டிக் குறிப்பாளர் ஆன் பிராங்க் (படம்) மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
242 பேருடன் சென்ற ஏர் இந்தியா வானூர்தி 171 (படம்) இந்தியா, அகமதாபாதில் தரையில் மோதி வெடித்ததில் 241 பயணிகளும், தரையில் குறைந்தது 28 பேரும் உயிரிழந்தனர்.
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,75,615 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.