உள்ளடக்கத்துக்குச் செல்

முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

சிங்கப்பூர் என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும் நகர அரசும் ஆகும். சிங்கப்பூர் அதன் தொடக்க கால வரலாற்றில் துமாசிக் என்று அறியப்பட்டது. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர் ஒரு கடல்சார் வணிக மையமாகத் திகழ்ந்தது. இதன் சமகால வரலாறு 1819 இல் தொடங்குகிறது. இசுடாம்போர்டு இராஃபிள்சு பிரித்தானியப் பேரரசிற்குச் சொந்தமாக ஒரு வணிகப் பணியிடமாகச் சிங்கப்பூரை நிறுவினார். 1867-இல் சிங்கப்பூர், நீரிணைக் குடியேற்றங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1959-இல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றது. 1963-இல் மலாயா, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவின் ஒரு புதிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவானது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒரு சுதந்திரமான இறையாண்மையுள்ள நாடாக உருவானது. மேலும்...


குத்புத்தீன் ஐபக் என்பவர் கோரி சுல்தான் முகம்மது கோரியின் ஒரு தளபதி ஆவார். 1206-இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவர் தில்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவி, மம்லூக் அரசமரபைத் தொடங்கினார். இது சுல்தானகத்தை 1290 வரை ஆண்டது. தில்லியில் குதுப் மினாரைக் கட்டும் பணியைத் தொடங்கி வைத்ததற்காக ஐபக் அறியப்படுகிறார். 1192-இல் இரண்டாம் தரைன் போரில் கோரி வெற்றிக்குப் பிறகு இந்திய நிலப்பரப்புக்கு பொறுப்பாளராக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார். முகம்மது கோரியின் இறப்பிற்குப் பிறகு வடமேற்கு இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டுக்காக மற்றொரு முன்னாள் அடிமை தளபதியான தாசல்தீன் இல்திசுவுடன் ஐபக் சண்டையிட்டு, தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தார். முகம்மது கோரிக்கு பின் பதவிக்கு வந்த கியாசுதீன் மகுமூது, இந்தியாவின் ஆட்சியாளராக ஐபக்கை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

  • துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
  • இந்தியாவிலேயே கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் தான் பணியாளர்கள் உட்கார்ந்து பணியாற்றுவதற்கான உரிமை சட்டப்படி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • மீனா நாராயணன் (படம்) தென்னிந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் ஆவார்.
  • இறகுப் பந்தாட்ட விளையாட்டின் ஆங்கிலப் பெயரான Badminton என்பது இங்கிலாந்தில் உள்ள Badminton மாளிகை என்னும் இடத்தின் காரணமாக அப்பெயரைப் பெற்றது.
  • மறைந்த திருத்தந்தை பிரான்சிசு தான் கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்து தெரிவான முதல் திருத்தந்தை ஆவார்.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

மே 15: பன்னாட்டுக் குடும்ப நாள்

புளிமூட்டை ராமசாமி (பி. 1912· டி. கே. ராமமூர்த்தி (பி. 1922· காசிவாசி செந்திநாதையர் (இ. 1924)
அண்மைய நாட்கள்: மே 14 மே 16 மே 17

பங்களிப்பாளர் அறிமுகம்

மோனிஷா செல்வராஜ் சென்னையைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். இவர் இணையத்திலும் அச்சு வடிவிலுமாகச் சேர்த்து முப்பது புதினங்களை எழுதியுள்ளார். இவரது பெரும்பாலான படைப்புகளின் மையக் கருத்துகளாக பெண்ணியமும், சூழலியல் விழிப்புணர்வும் அமைந்துள்ளன. மார்ச் 2025 துவக்கத்திலிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறார். பெண்ணியமும் நாட்டார் மரபும் என்கிற விக்கிப்பீடியாப் போட்டியில் கலந்துகொண்டு பெண் சாதனையாளர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மீனா நாராயணன், அபுஷா பீபி மரைக்காயர், கமலா கிருஷ்ணமூர்த்தி, தபிதா பாபு,தி இந்தியன் லேடீஸ் மேகசின் முதலியவை இவர் உருவாக்கிய கட்டுரைகளில் சில.

சிறப்புப் படம்

மத்திர நாட்டு அரசின் இளவரசியும், சல்லியனின் தங்கையும், பாண்டுவின் இரண்டாவது மனைவியுமான மாதுரியின் ஓவிய அச்சுப்பிரதி.

ஓவியர்: ரவி வர்மா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இலிருந்து மீள்விக்கப்பட்டது