சிங்கப்பூர் என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும் நகர அரசும் ஆகும். சிங்கப்பூர் அதன் தொடக்க கால வரலாற்றில் துமாசிக் என்று அறியப்பட்டது. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர் ஒரு கடல்சார் வணிக மையமாகத் திகழ்ந்தது. இதன் சமகால வரலாறு 1819 இல் தொடங்குகிறது. இசுடாம்போர்டு இராஃபிள்சு பிரித்தானியப் பேரரசிற்குச் சொந்தமாக ஒரு வணிகப் பணியிடமாகச் சிங்கப்பூரை நிறுவினார். 1867-இல் சிங்கப்பூர், நீரிணைக் குடியேற்றங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1959-இல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றது. 1963-இல் மலாயா, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவின் ஒரு புதிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவானது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒரு சுதந்திரமான இறையாண்மையுள்ள நாடாக உருவானது. மேலும்...
குத்புத்தீன் ஐபக் என்பவர் கோரி சுல்தான் முகம்மது கோரியின் ஒரு தளபதி ஆவார். 1206-இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவர் தில்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவி, மம்லூக் அரசமரபைத் தொடங்கினார். இது சுல்தானகத்தை 1290 வரை ஆண்டது. தில்லியில் குதுப் மினாரைக் கட்டும் பணியைத் தொடங்கி வைத்ததற்காக ஐபக் அறியப்படுகிறார். 1192-இல் இரண்டாம் தரைன் போரில் கோரி வெற்றிக்குப் பிறகு இந்திய நிலப்பரப்புக்கு பொறுப்பாளராக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார். முகம்மது கோரியின் இறப்பிற்குப் பிறகு வடமேற்கு இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டுக்காக மற்றொரு முன்னாள் அடிமை தளபதியான தாசல்தீன் இல்திசுவுடன் ஐபக் சண்டையிட்டு, தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தார். முகம்மது கோரிக்கு பின் பதவிக்கு வந்த கியாசுதீன் மகுமூது, இந்தியாவின் ஆட்சியாளராக ஐபக்கை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,74,022 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.